Trending

6/recent/ticker-posts

Live Radio

வாக்குமூலம் வழங்க சி.ஐ.டிக்கு வர முடியும் - பிள்ளையான்...!


பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக தனக்கு நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ள போதும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதிக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வரமுடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 ஊடகத்துக்கு அவரது முன்னாள் செயலாளரான ஆசாத் மௌலானா தெரிவித்துள்ள கருத்து தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காகவே நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Post a Comment

0 Comments