Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு – பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!



களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் கொழும்பு உட்பட பல பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் இந்த நிலைமையை மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments