குவைட்டில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்களது கைவிரல் அடையாளத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக வழங்க வேண்டும் என அந்தநாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கான கால அவகாசம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குவைட்டில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களும் உரிய இடங்களில் தங்களின் கைவிரல் அடையாளத்தை வழங்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.
0 Comments