Trending

6/recent/ticker-posts

மும்பை படகு விபத்தில் 13 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் மீட்பு...!



மும்பை கடற்கரையில் புதன்கிழமை (18) மாலை இந்திய கடற்படை படகொன்று தனியார் பயணிகள் படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து (இந்தியாவின் நுழைவாயில்) மும்பை நகரத்தின் துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்துள்ள எலிபெண்டா தீவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற படகே நேற்று மாலை 4.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் கடற்படை வீரர் ஒருவரும் கடற்படை கப்பலில் இருந்த மேலும் இருவருமே அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, குறைந்தது 100 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments