Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



2025 இல் இலங்கையின் மொத்த ஏற்றுமதி இலக்கு $19 பில்லியன் டொலர்கள்...!



2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 18.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) கணித்துள்ளது.

இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில், மொத்த ஏற்றுமதிகள் (வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள்) மூலம் இலங்கை 13.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக EDB இன் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.

இது 2023 இன் முதல் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 7.19 சதவீதம் அதிகமாகும்.

2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இலக்கு 16.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும், ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கை அந்த இலக்கில் 82 வீதத்தை அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments