![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1IDG_az3zKtk-Df3Cfk9aUV2_xPv3Xt6tSLT7uBguzqZYX9fR9ImH5epPJi9Sb1w3uu7vzdb-24DMT3ElqMGn5u7QF1TjmQIIVYOdquFLN7ODgG2xGWKECZavD5wTIFWmOQdTSfJUje7rhvtB36cO8fxofoYbCrJ4SNr1El2myGkOsV8LOEVPuIAu3nc/s16000/India_News.png)
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக தனது 92 ஆவது வயதில் மன்மோகன் சிங் காலமானதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 92 வயதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்ததாக வைதத்தியசாலை அறிக்கை வெளியாகியுள்ளது.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1932 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த மன்மோகன் சிங், நிதியமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தினார்.
அதற்கு முன்னர் இந்தியா ஏறத்தாழ சோசலிச நாடுகளின் பாணியிலான பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வந்தது. ஆனால் அதில் ஏராளமான ஊழல்களும், பிரச்னைகளும் இருந்தன. இது நாட்டின் வளர்ச்சியை கடுமையாக பாதித்து, பொருளாதார சரிவை ஏற்படுத்தியது.
எனவே இந்த பொருளாதார கொள்கைளை மாற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் மிகுந்த முனைப்புடன் இருந்தது. 1991-1996 வரையிலான பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசாங்கத்தில் மன்மோகன் நிதியமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் புதிய பொருளாதார கொள்கை இந்தியாவில் முதன் முதலாக அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments