Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



குழந்தை பிறந்து 45 தினங்களே ஆன 23 வயது பெண் கத்தியால் குத்திக் கொலை...!



இரண்டாவது குழந்தை பிறந்து 45 தினங்களே ஆன 23 வயது பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள புளியஞ்சோலையை சேர்ந்தவர் பைசூர் ரகுமான். இவரது மனைவி சகுபர் நிஷா (23). இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகிறது. மேலும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில், தற்போது சகுபர் நிஷாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்து 45 தினங்களே ஆகக்கூடிய நிலையில் இலுப்பூரில் உள்ள அவரது தாய் வீட்டில் இருந்து கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு தான் தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சகுபர் நிஷா, அவரது கணவர் வீட்டில் ரத்த வெள்ளத்திலிருந்த நிலையில் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சகுபர் நிஷாவை கறம்பக்குடி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சகுபர் நிஷா விலாவில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதனை தொடர்ந்து பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற கறம்பக்குடி காவல் துறையினர், சகுபர்நிஷா உடலை உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

முதலில் காவல்துறையினர் சகுபர்நிஷாவின் கணவர் பைசூர் ரகுமானிடம் விசாரணை மேற்கொண்டபோது, முதலில் பைசூர் ரகுமான் தான் தான் தனது மனைவியை குடும்ப பிரச்சனை காரணமாக கத்தியை வைத்து குத்தி கொலை செய்து விட்டேன் என்று ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்த நிலையில், பின்னர் பைசூர் ரகுமானிடம் காவல்துறையினர் என்ன காரணத்திற்காக இந்த கொலையை செய்தாய் என்று தொடர்ந்து விசாரணை நடத்தும்போது பின்னர் பைசூர் ரகுமான், நான் எனது மனைவியை கொலை செய்யவில்லை காவல்துறையினருக்கு பயந்து தான் நான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டேன் என்று தெரிவித்ததால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்து பின்னர் சகுபர் நிஷாவை யார் கொலை செய்தார்கள் என்று தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனர்.

அப்போது தான் சகுபர் நிஷா கொலை செய்யப்பட்டு கிடந்த அவரது கணவர் பைசூர் ரகுமான் வீடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் விசாரணை‌ மற்றும் சோதனையை தொடர்ந்த நிலையில் பைசூர் ரகுமான் வீட்டிற்கு பின்புறம் வசிப்பதாக கூறப்படும் முகமது யாகூப் என்பவரது மகன் முகமது அபு உஸ்மான் (20) என்பவரது உடைகள் ரத்த கரையுடனும் இருந்ததை காவல்துறையினர் கைப்பற்றி முகமது அபு உஸ்மானையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சகுபர் நிஷா அணிந்திருந்த அரை பவுன் நகைக்காக சகுபர் நிஷாவை முகமது அபு உஸ்மான் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சகுபர் நிஷாவை குத்திய கத்தியை கறம்பக்குடி பெரியாற்று பாலம் அருகே ஒளித்து வைத்திருப்பதாக முகமது அபி உஸ்மான் கூறியதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை அழைத்துக் கொண்டு கத்தியை எடுக்க செல்லும் பொழுது முகமது அபி உஸ்மான் இயற்கை உபாதை கழிப்பதாக காவல்துறையினரிடம் தெரிவித்துவிட்டு அங்குள்ள அக்னி ஆற்று பாலத்திலிருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்தபோது முகமது அபி உஸ்மானுக்கு வலது காலில் முறிவு ஏற்பட்ட நிலையில் அவரை காவல்துறையினர் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அவருக்கு கால் குணமடைந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைக்க உள்ளனர்.

Post a Comment

0 Comments