Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இன்றைய வானிலை தொடாபான அறிக்கை...!



மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்திலும் சிறிதளவு மழை எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு, மத்திய மற்றம் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை இல்லாத வானிலையே நிலவுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும். மழையுடன் கூடிய வானிலையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments