Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் மீண்டும் அதிகரிப்பு...!



நாட்டில் நேற்று (14) பெய்த மழையினால் மல்வத்து ஓயா, வலவே கங்கை மற்றும் மகுரு ஓயா ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொடர் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments