‘‘ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின்போது இந்தியாவிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யவும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எரிபொருள் விநியோக குழாயை நிர்மாணிப்பதற்குமான திட்டத்துக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இவை அபாயகரமான திட்டங்கள். இந்த திட்டங்கள் அமுலாக்கப்பட்டால் நாட்டின் அத்தியாவசிய தேவைகளுக்கும் இந்தியாவை சார்ந்திருக்க நேரிடும். இந்தியாவின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களே இன்று இவ்வாறான வேலைத்திட்டங்களை அமுல்படுத்த முயற்சிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது வெளியிடப்பட்ட இருதரப்பு கூட்டறிக்கை குறித்து விளக்கமளிக்கும் வகையில் கொழும்பில் நேற்று புதன்கிழமை(18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ‘‘இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதை நாங்கள் நேர்மறையாகவே பார்க்கிறோம். இருந்தபோதும் ஜனாதிபதியின் இந்திய விஜயம் மற்றும் இரு நாட்டு தலைவர்களாலும் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையை தொடர்ந்து மேலும் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம்பெற ஆரம்பித்துள்ளன. இந்தக் கூட்டறிக்கையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அதிதிறன் கொண்ட மின் கட்டமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, குழாய் வழியாக மின் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வோம் என்பதே பொருளாகும். இதற்கு அரசாங்கத் தரப்பில் எம்மிடம் அதிக மின் உற்பத்தி இருப்பதாகவும் அந்த மேலதிக உற்பத்தியை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்குமென்று குறிப்பிட்டுள்ளது. மின் உற்பத்தி இன்று மேலதிகமான உற்பத்தியாக இருந்தாலும் எதிர்காலத்தில் நாடு அபிவிருத்தியடைந்து மின் நுகர்வு அதிகரிக்கும்போது இந்த மேலதிக உற்பத்தி இவ்வாறே இருக்குமென்று யாராலும் எதிர்வுகூற முடியாது.
மற்றையது, அவசர நிலைமைகளின்போது இந்தியாவிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடியுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர நிலைமைகளின்போது பங்களாதேஷ் அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்தது. அதன் பின்னர் கட்டணத்தை செலுத்த முடியாமல் முழு பங்களாதேஷும் இருளில் மூழ்கியது. எனவே, இந்த விவகாரத்தில் மின்சக்தியுடன் விளையாடுகிறார்கள். இது மிகவும் அபாயகரமான செயற்பாடு என்று நாங்கள் நம்புகிறோம். மேலதிக மின் உற்பத்தி இருக்கிறது. மேலதிக உற்பத்தியை விற்பனை செய்வோம், அதனூடாக டொலர்களை நாட்டுக்கு வரவழைப்போம் என்று அரசாங்கம் எத்தனை தேவதை கதைக் கூறினாலும் எதிர்காலத்தில் முதலீடுகள் இல்லாமல் போகும்போதும் புதிய ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், தொழில் வலயங்கள் உருவாகும்போது அவற்றுக்குத் தேவையான மின்வலுவை பெற்றுக்கொடுக்க முடியாமல் போகும் போது இறுதியில் இந்தியாவிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய நேரிடும்.
இந்தியாவில் மின்சாரத்தை கொள்வனவு செய்து, ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் போனால் முழு நாடும் இருளில் மூழ்கும் நிலை உருவாகும். எனவே, இதுவொரு எச்சரிக்கை நிறைந்தவொரு திட்டமாகும். எல்லா பாகங்களிலும் இலங்கையை அவர்களுடன் இணைப்பொன்றை உருவாக்கிக்கொள்வதே இந்தியாவின் தேவையாகும். அரசியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் மின்சக்தி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இலங்கையை அவர்களின் இடைத்தொடர்பு என்பதில் நடிக்கும் கதாபாத்திரமாக்கி கொள்ளவேண்டும் என்பதே இந்தியாவின் அவசியமாகும்.
மேலும் அந்த கூட்டறிக்கையில், இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு மலிவு மற்றும் நம்பகமாக எரிசக்தியை வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்த் திட்டத்தை அமுல்படுத்தப்போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம் தொடர்பில் தற்காலிக கருத்துகளை முன்வைத்தாலும் எமது நாடு எரிபொருள் வளம் கொண்ட நாடு இல்லை. எமக்கு தேவையான எரிபொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தே பயன்படுத்துகிறோம். இந்தியாவையும் இலங்கையையும் இணைத்து எரிபொருள் குழாயொன்றை இணைத்தால், இறுதியில் எரிபொருளுக்காக இந்தியாவை எதிர்பார்த்து இருக்கவேண்டி ஏற்படும். இந்தியா கூறும் விலையின் அடிப்படையில் எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டி ஏற்படும். குறைந்தது அதுதொடர்பில் இலங்கை சார்பில் நிலைப்பாட்டைக் கூட வெளியிட முடியாத நிலை ஏற்படும். இந்த குழாய் இரு பக்கமும் இயங்காது. இந்தியாவிலிருந்து இலங்கையை நோக்கி மாத்திரமே இயங்கும். இந்தியா ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்கிறது. அவற்றை சுத்திகரித்து ஐ.ஓ.சி.நிறுவனத்தினூடாக விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கை, சிங்கப்பூர் சந்தைக்கு ஏற்ப விலையை நிர்ணயித்தாலும், ஐ.ஓ.சி. மிக குறைந்த விலையில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்கிறது. அவ்வாறென்றால் அவர்கள் அதிக இலாபத்தையும் அடைகிறார்கள். ரஷ்யாவிடமிருந்து பெறும் எரிபொருளை சுத்திகரித்து இந்தியா அமெரிக்காவுக்குக் கூட விற்பனை செய்கிறது. அதன் காரணமாக இந்த எரிபொருள் குழாய் எமது எரிசக்தி துறையை பாதுகாக்காது. மாறாக எரிசக்தியை தோற்கடிக்கும் எரிபொருள் குழாயாக அமையும். இது அபாயகரமானதாகும்.
இந்தியாவுக்கு பிரக்மபுத்ரா என்ற திட்டமொன்று இருக்கிறது. வலயத்திலுள்ள ஏனைய நாடுகளை அவர்களுடன் இணைத்துக்கொள்வதே அவர்களின் திட்டம். அநேகமாக இந்தியாவே அதிலிருந்து தப்பித்திருந்தது. இந்நிலையில் எமக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்டு எமது தலைவர்களை பயன்படுத்தி ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களை அநுரவினூடாக இந்தியாவின் எரிபொருளை இலங்கைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஒருவேளை கட்டணம் செலுத்த முடியாவிட்டால் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். இந்தியாவின் ஆக்கிரமிப்பு தொடர்பிலும் இந்தியாவின் விரிவாக்கம் தொடர்பிலும் இலங்கைக்கு கற்பித்த ரோஹண விஜயவீரவின் கீர்த்தி நாமத்தை தொடர்ந்து பயன்படுத்தி வரும் தலைவர்களின் தலைமைத்துவத்தினாலேயே இவ்வாறான திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதே இதிலுள்ள சிக்கலாகும்.
கடந்த காலங்களில் கூறியவற்றை மறந்துவிட்டார்கள். மோடி தோளில் கைவைத்ததும் அதில் மயங்கி நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டுள்ளார்கள். இந்தியாவுக்கு ஏற்றவாறு எரிபொருள் குழாயை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளார்கள்’’
மின்சக்தியையும் எரிசக்தியையும் இவ்வாறு விளையாட்டாக கருதுவது ஆபத்தை ஏற்படுத்தும்’’ என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

என தெரிலித்தார்.
0 Comments