Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பூமி மீது மோதிய விண்கல் - காணொளி...!



சூரிய மண்டலத்தில் சிறுகோள்கள் என அழைக்கப்படும் விண்கற்கள் சுற்றி வருகின்றன. இந்த விண்கற்கள் அடிக்கடி, புவி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைவதுண்டு. இவை பெரும்பாலும் வளிமண்டலத்திலேயே அழிந்து போகின்றன.

இந்நிலையில், விண்கல் ஒன்று நேற்று புவி வட்டப்பாதைக்குள் வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

70 சென்றிமீற்றர் விட்டம் கொண்ட இந்த விண்கல் நள்ளிரவு வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, அந்த விண்கல் நேற்று இரவு வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. கண்டுபிடிக்கப்பட்ட 12 மணி நேரத்துக்கு பிறகு அந்த விண்கல்லானது ரஷ்யாவின் யாகுடியா பகுதியில் விழுந்துள்ளது.

பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன், விண்கல் பல துண்டுகளாக சிதைந்து அங்குள்ள வனப்பகுதியில் தீப்பிழம்பாக சிதறி விழுந்தது.

இதுதொடர்பான பிரம்மிப்பூட்டும் காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.

மேலும், இந்த விண்கல் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஒரு தீப்பந்து போல காட்சியளித்துவிட்டு சென்றுவிடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்துள்ளனர்.
 

Post a Comment

0 Comments