Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பல இலட்சம் ரூபா கொள்ளை - மூவர் கைது...!



நுவரெலியாவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் தரிப்பிடத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலைசெய்து ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 06ஆம் திகதி 85 வயதான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட பின்னர் இலங்கை போக்குவரத்து சபை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பதுளை மற்றும் மஹவ பகுதிகளைச் சேர்ந்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments