அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
அதன்படி அவர்கள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 02.55 மணியளவில் கட்டார் ஏர்வேஸின் QR-662 விமானத்தில் நாட்டை வந்தடைந்ததுடன் டொனால்ட் லுவுடன் நாட்டின் இராஜாங்க திணைக்களத்தின் மற்றுமொரு உயர் அதிகாரியும் தூதுக்குழுவாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்துள்ளனர்
அவர்களை வரவேற்க இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
0 Comments