நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மழை மற்றும் வெள்ள நிலைமை காரணமாக டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது.
அத்தோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 23 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் டெங்கு பரவலைக் கருத்திற் கொண்டு, சில மாவட்டங்கள் அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், காலி, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments