Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அரிசி இறக்குமதி கால அவகாசம் நீடித்தது...!



அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்தது.

இந்நிலையில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை தனியார் இறக்குமதியாளர்கள் இந்த காலப்பகுதியில் 16,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளனர். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகையில் 75 ஆயிரம் கிலோகிராம் அரிசி மனித பாவனைக்கு உகந்ததல்ல என்பது கண்டறியப்பட்டு, அவற்றை மீள் ஏற்றுமதி செய்ய சுங்கத் திணைக்களம் குறித்த இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments