Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!



நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 47,291 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 11,942 ஆகும்.

இதேவேளை, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments