கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி வருவதை தொடர்ந்து சிரிவின் அலப்போ நகரிலிருந்து சிரிய இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சியை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் அலப்போ நகரிற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே சிரிய படையினர் பின்வாங்கியுள்ளனர்.
நகரின் பெரும்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக தெரிவித்துள்ள சிரிய இராணுவம் எனினும் அந்த நகரை மீள கைப்பற்றுவதற்காக பதில் நடவடிக்கையொன்றை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
சிரியாவின் உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
கிளர்ச்சியாளர்கள் கடந்த புதன்கிழமை தங்கள் நடவடிக்கையை ஆரம்பித்தது முதல் 20 பொதுமக்கள் உட்பட 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை சிரிய ஜனாதிபதி தனது நாட்டின் ஸ்திரதன்மை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
சிரியாவிற்கு அதன் நண்பர்கள் சகாக்களின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை ஒழிக்கும் திறன் உள்ளது என சிரிய ஜனாதிபதி அசாத் தெரிவித்தார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹயட்n டஹ்ரிர் அல்சாம் என்ற அமைப்பே தற்போதைய தாக்குதலை முன்னெடுத்துள்ளது.இந்த அமைப்புடன் துருக்கி ஆதரவுபெற்ற குழுவும் இணைந்து செயற்படுகின்றது.
இவர்கள் அலப்போவின் விமானநிலையம் உட்பட பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.
0 Comments