Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



தொற்று நோய்கள் பரவும் அபாயம் குறித்து...!!



நாட்டில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் குறித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த பகுதிகளிலுள்ள மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் எனச் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணற்று நீரைப் பயன்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், அவற்றைச் சுத்தப்படுத்தும்போது பொதுச் சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது சிறந்தது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, சமைத்த உணவை ஈ போன்ற நோய் காவிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும், நன்கு கொதித்தாறிய நீரைப் பருக வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக வயிற்றுப்போக்கு, டெங்கு, எலிக்காய்ச்சல், வைரஸ் நோய்கள் இந்தக் காலத்தில் அதிகளவில் பரவி வருவதாகவும் சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments