Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஜனவரியில் எரிபொருள் விலை சரியாக கட்டுப்படுத்தப்படும்.

 

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், அது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படவில்லை என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முன்வைக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் எரிபொருள் விலை நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

விலைக் கட்டுப்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்படும், வரிகள் எவ்வாறு குறைக்கப்படும் என்பது வரவு செலவுத் திட்டத்தில் நிரந்தரமாக தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2025ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


Post a Comment

0 Comments