Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



வடமராட்சி கிழக்கு பகுதியில் ஆட்கள் யாருமற்ற நிலையில் படகு கரை ஒதுங்கியது....!



வடமராட்சி கிழக்கு, உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் படகு ஒன்று இன்று திங்கட்கிழமை காலை (23) கரை ஒதுங்கியுள்ளது.

படகு ஆட்கள் யாருமற்ற நிலையில் கடலில் மிதந்துவந்து கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு உடன் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாச தலைவர் மற்றும் பொலிஸார் படகை பார்வையிட்டதுடன், நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இயந்திரமற்று ஆழ்கடலில் இருந்து மிதந்துவந்த நிலையில் கரையொதுங்கிய இலங்கை நாட்டிற்கு சொந்தமான குறித்த படகை சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டவர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments