Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



வீதி விபத்துக்களால் 129 போர் உயிரிழப்பு - 25 நாட்களில்...!

 


கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இம்மாதம் வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வருடம் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 129 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 155 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிலுள்ள வீதிவிதிகளை பேணுவதற்கும் விபத்துகளைக் குறைப்பதற்கும் பொலிஸார் டிசம்பர் 22 ஆம் திகதி சிறப்பு போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments