இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டுவன்டி டுவன்டி போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நெல்சனில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பாக குசல் பெரேரா 101 ஓட்டங்களையும், அணித் தலைவர் ச்சரித் அசலங்க 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
219 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ரச்சின் ரவீந்திர 69 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ச்சரித் அசலங்க 03 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 02 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 2 – 1 என கைப்பற்றியுள்ளது.
0 Comments