
இந்த ஆண்டில் பெருந்தோட்ட மக்களுக்கென 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் சலுகைகளின் அடிப்படையில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. எனினும் அரசாங்கத்தின் கீழ், இந்த புதிய வீடுகள் தகுதியான பெருந்தோட்ட மக்களுக்கு மட்டுமே வழங்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments