Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...!



இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனியில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி, மனோரமா, மயூரி மற்றும் பலர் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. மேலும், இந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

நீண்ட காலமாக இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

முதல் பாகத்தை தயாரித்த ஸ்ரீ சூர்யா மூவிஸ் தான் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments