Trending

6/recent/ticker-posts

நைஜீரியாவில் விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறியது - 70க்கும் அதிகமானவர்கள் பலி...!



நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறிய விபத்தில் 70க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மத்திய நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அதிலிருந்து வெளியேறிய எரிபொருளை எடுப்பதற்காக பெருமளவு மக்கள் காத்திருந்தவேளை அது வெடித்துசிதறியுள்ளது.



60,000 லீட்டர் எரிபொருளுடன் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் தலைநகரை நோக்கிய முக்கிய பாதையில் விபத்துக்குள்ளானது,என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் அதிலிருந்து வெளியேறிய எரிபொருளை எடுப்பதற்காக பெருமளவானவர்கள் அதற்கருகில் சென்றபோது அது வெடித்துசிதறியதுஎன தெரிவித்துள்ளார்.

பலர் அடையாளம் காணமுடியாதளவிற்கு கருகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.



பெருமளவு மக்கள் காத்திருந்தவேளை எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறியதால் மற்றுமொரு கொள்கலன் தீப்பிடித்தது என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் 60 உடல்களை மீட்டுள்ளோம் அனேகமானவர்கள் துப்புரவுதொழிலாளர்கள் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments