Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



வாழைச்சேனை மோதல்: 8 பேர் வைத்தியசாலையில்...!



வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமா இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (24) செம்மண்ணோடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த எட்டுப்பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அதில், நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களிலும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர் குறித்த தகராறு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments