Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



வான்கதவுகள் திறக்கப்பட்டன...!!



மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ஆற்றினை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருப்பதுடன் நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.

அத்துடன் கடல், ஆறு மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments