
ஹிங்குரக்கொட இராணுவ முகாமின் விமான ஓடுதளம் சர்வதேச தரத்திற்கமைய அபிவிருத்தி செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பணிகள் விமானப் படைத் தளபதியின் கண்காணிப்புக்கு உட்பட்டன.
சர்வதேச மட்டத்திலான விமான ஓடுதளமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹிங்குரக்கொட ஓடுதளம் 2500 மீற்றர் நீளம்கொண்டது. இதில் 850 மீற்றருக்கான அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதற்கான அனைத்து திட்டங்கள் மற்றும் நிர்மாணப் பணிகள் இலங்கை விமானப் படையினால் முன்னெடுக்கப்படுகின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.
0 Comments