Trending

6/recent/ticker-posts

Live Radio

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி...!



இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெற்றிக் தொன் உப்பு திங்கட்கிழமை (27) நாட்டை வந்தடையும் என இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் (STC) அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ,

இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் 12,500 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், முதலாவது தொகுதி திங்கட்கிழமை நாட்டை வந்தடையும். நாட்டில் நிலவும் உப்பு தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தியாவிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் பெய்த பருவ மழையினால் உப்பை உற்பத்தி செய்வதில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து அராசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments