சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றவுள்ள அமெரிக்கா.
புதிய அமெரிக்க நிர்வாகத்தினால் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பட்டியல் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு வெளியேற்றப்படவுள்ள 14 இலட்சத்து 45,549 பேரில் 3065 பேர் இலங்கையர்கள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க புகலிட மற்றும் சுங்க அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர். உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர்.
இதில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படவுள்ள வெளிநாட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் அமெரிக்க அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்காத நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியொன்றும் காணப்படுகிறது. எனினும் குறித்த பட்டியலில் இலங்கையர்கள் இல்லையென தெரியவந்துள்ளது.
0 Comments