
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடான காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்படும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் மீனவர்களும் கடற்படையினரும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு மற்றும் ஊடவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
0 Comments