
குழந்தைகளுக்கு இடையில் தற்போது நோய்த்தாக்கங்கள் அதிகரித்து வருவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவத் துறையின் பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளிடையே நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, குழந்தைகளிடையே மனநிலை தொடர்பான நோய்களும் தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 Comments