Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை!

 வவுனியா - சுந்தரபுரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலைச் சம்பவம் வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

தமிழர் பகுதியில் கொடூரம் - இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை | Young Family Stabbed To Death In Vavuniya

குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருவதுடன் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.  

மோட்டார் சைக்கிளில் இரவு 11:30 மணியளவில் இவரது வீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவரின் மைத்துனர் சந்தேகத்தின்; பேரில் ஈச்சங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கொலைச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments