Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அதிகரிக்கும் துப்பாக்கி சூடு

 


காலியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு


காலி - அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (09) காலை 6.15 மணியளவில் சிவப்பு நிற ஸ்கூட்டரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் "பொலக்கு பெட்டி " என்ற பாதாள உலகக்குழு உறுப்பினரின் உறவினர் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Post a Comment

0 Comments