Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இஸ்ரேலிய மத ஸ்தலங்கள் தொடர்பில்...!



இஸ்ரேலிய மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இதுவரை, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அல்லது அதன் எந்தவொரு திணைக்களமும் இஸ்ரேலிய பிரஜைகளால் மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை.

எனினும், இவ்வாறான நிலையங்கள் பராமரிக்கப்படுவதை நாம் அறிவோம். அவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்று நிலைமையை அவதானித்துள்ளோம். அத்தகைய அனுமதி இதுவரை வழங்கப்படாததால், இந்த நடவடிக்கைகள் அனுமதியின்றி நடைபெறுவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments