Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் மோசமான செயல் - விசாரணைகள் ஆரம்பம்

 கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில ஊழல் அதிகாரிகளின் மோசடி நடவடிக்கைகள் குறித்து சிறப்பு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குடிவரவு மற்றும் குடியகல்வுக்கான பதில் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் உத்தரவிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் குற்றச்சாட்டு

அண்மைக்காலமாக குடிவரவு அதிகாரிகளின் சிலரின் செயற்பாடுகள் குறித்து பயணிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் மோசமான செயல் - விசாரணைகள் ஆரம்பம் | Investigation Into Officials At Katunayake Airport

எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments