குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று ஒரு பரிதாபகரமான விபத்து ஏற்பட்டது. வழக்கமான பயிற்சியின் போது கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டர் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த 2 பைலட்டுகளுடன் 3 பேர் பலியானது.
இந் நிலையில் போர்பந்தர் விமான நிலையம், தற்போது பயணிகள் விமானங்களை இயக்கவில்லை. இங்கு இந்திய விமானப்படை மற்றும் பிற படைப்பிரிவுகளின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்துகின்றன. கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும் இதே விமான நிலையத்தை பயன்படுத்துகின்றன.
மேலும் திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். அதேபோல், இந்திய கடலோர காவல்படை விபத்தை தொடர்புடைய தகவல்களை உறுதிப்படுத்தியது. “இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டர், குஜராத்தின் போர்பந்தரில் பயிற்சி பணியின்போது விபத்தில் சிக்கியது. இதில் 3 பேர் பலியாகினர்,” என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இதுவரை விபத்தின் காரணம் தெளிவாக தெரியவில்லை. தொழில்நுட்ப கோளாறாக இந்த விபத்து நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இதேபோல் ஒரு இந்திய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
FLASH: All 3 crew members including 2 pilots dead in the ALH Dhruv helicopter crash in Gujarat’s Porbandar.
— The New Indian (@TheNewIndian_in) January 5, 2025
A similar ALH helicopter crash happened in September this year and the ICG had grounded all ALHs in its fleet for checks.#ALHDhruv #HelicopterCrash #IndianCoastGuard… pic.twitter.com/GcHyRwbZVU
0 Comments