Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



புஷ்பா 2 படம் விபத்து எதிரொலி..! இனி சிறுவர்கள் சினிமா பார்க்க தடை..!



தெலுங்கானாவில், காலை 11 மணிக்கு முன்பும் இரவு 11 மணிக்குப் பிறகும் திரைப்படங்களைப் பார்ப்பதால் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் தூக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனவே, காலை 11:00 மணிக்கு முன்பு திரையிடப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளையும், இரவு 11 மணிக்குப் பிறகு திரையிடப்படும் திரைப்படங்களையும் பார்ப்பதற்கு தடை விதிக்கக் கோரி குழந்தை மனநல மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி விஜயேசன் ரெட்டி, திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தார். அந்த உத்தரவில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்பும் இரவு 11 மணிக்குப் பிறகும் சினிமா காட்சிகளைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு பிப்ரவரி 22 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments