Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வதில் ட்ரம்ப் காட்டும் ஆர்வம் - கனடா பிரதமர் எச்சரிக்கை...!



“கனடாவை அபகரித்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்வதில் ட்ரம்ப் காட்டும் ஆர்வம் நிஜமானது.” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இணைப்பதற்கு ட்ரம்ப் காட்டும் ஆர்வத்தினை சுட்டிக்காட்டி தனது ஆதரவாளர்களிடம் பேசினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது;

“ட்ரம்ப் நிர்வாகம் நம்மிடம் எத்தனை முக்கியத்துவமான கனிம வளங்கள் உள்ளன என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் அடிக்கடி நம்மை அமெரிக்காவுடன் இணைத்து அதன் 51ஆவது மாநிலமாக மாற்றுவது பற்றி பேசி வருகிறார்கள் என்று நான் உங்களுக்கு கூறிக்கொள்கிறேன்.

அவர்கள் நமது வளங்களைப் பற்றியும், நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பது பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பதுடன் அவற்றின் பயன்களை அடையவும் விரும்புகிறார்கள். அதனைச் செய்வதற்கான ஒரே வழி கனடாவை அமெரிக்காவுக்குள் ஐக்கியம் ஆக்குவது தான் என்று ட்ரம்ப் புரிந்து வைத்துள்ளார்." என்று கூறினார்.

அத்தோடு பசுமை சக்திக்கான முக்கிய தேவைகளான லிதியம், க்ராபைட், நிக்கல், தாமிரம் மற்றும் கோபால்ட் போன்ற தாதுக்கள் கனடாவில் அதிக அளவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments