குழந்தைப் பருவ அபிவிருத்தி தேசிய கொள்கையொன்றை தயாரிப்து தொடர்பிலான பேச்சுவார்த்தையின் முதல் சுற்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இசுருபாயவில் இடம்பெற்றது.
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் செயற்படுத்தப்படும் ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி மத்திய நிலையங்களை ஒன்றிணைத்து ஒரே கொள்கையின் கீழ் அதனை செயற்படுத்த தேவையென இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கென ஒரே கொள்கையை கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த பொது கொள்கை மத்திய அரசு உட்பட அனைத்து மாகாணங்களுக்கும் செல்லுபடியாக வேண்டும். குழந்தைப் பருவ அபிவிருத்தியுடன் தொடர்புடைய ஆசிரியர் வழிகாட்டல் ஆட்சேர்ப்பு பரீட்சை, ஊதியம், பயிற்சி உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதல்களும் உள்ளடக்கப்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்தார்.
0 Comments