
இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தேசபந்து தென்னகோன் சரணடைய மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியிருந்த நிலையில் தேடப்பட்டு வந்தார் .
தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது, அதன் பிறகு அவர் மாத்தறை நீதவானின் உத்தரவை இடைநிறுத்த இடைக்கால உத்தரவைக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
பின்னர் சி.ஐ.டியின் கோரிக்கையின் அடிப்படையில் தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த வாரண்டை மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்தது.
திங்கட்கிழமை, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி தேசபந்து தென்னகோனின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments