
ஹமாசிற்கு ஆதரவான பிரச்சாரங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக மாணவர் ஒருவர் அமெரிக்க குடிவரவு துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
படர் கான் சுரி என்ற இந்தியர் கைதுசெய்யப்பட்டுள்ளதை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் உறுதி செய்துள்ளது.
அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக செயற்படுபவர்களிற்கு எதிரான டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபர் ஈராக் ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை கட்டியெழுப்புவது குறித்த தனது ஆராய்ச்சிக்காக விசா பெற்றவர் என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் எந்த விதமான சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக நாங்கள் அறியவில்லை, அவரை தடுத்துவைத்திருப்பதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என பல்கலைகழக பேச்சாளர் என்பிசி நியுசிற்கு தெரிவித்துள்ளார்.
நாங்கள் வெளிப்படையான சுதந்திரமான விசாரணைக்கான எங்கள் சமூகத்தின் உறுப்பினர்களின் உரிமையை ஆதரிக்கின்றோம், என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்
இதேவேளை ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத்தின் வெளிநாட்டு மாணவர் ஒருவர்,ஹமாஸ் ஆதரவு பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்த குற்றச்சாட்டுகளிற்காகவும்,சமூக ஊடகங்களில் யூதஎதிர்ப்புணர்வை பரப்பியமைக்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஹமாசின் சிரேஸ்ட உறுப்பினரான ஒருவருடன் சுரிக்கு தொடர்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுரியின்பிரசன்னமும் அவரது நடவடிக்கைகளும் குடிவரவு சட்டத்தின் கீழ் அவரை நாடு கடத்துவதற்குரியவராக்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தீர்மானித்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments