
எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. de S. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என தொழிலாளர் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர். அனில் ஜயந்த உறுதியளித்துள்ளார்.
இன்று (1) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சில திட்டமிட்ட குழுக்கள் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் செயல்பாட்டு செலவுகள் குறித்து தெரிவித்து கமிஷன் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments