Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



IMF UPDATE: நான்காவது கடன் தவணை...!



சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு செய்துள்ள நிலையில், இதன் மூலம், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, இலங்கைக்கு உடனடி நிதி வசதியாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி 1.34 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அதிகரித்துள்ளது.

இலங்கையின் செயல்பாடு இந்தத் திட்டத்தின் கீழ் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

சமூகச் செலவினங்களுக்கான சுட்டெண் இலக்கைத் தவிர, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்கான ஏனைய அனைத்து அளவு இலக்குகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments