
2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் இன்று (28) நடைபெறும் எட்டாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ரஜத் படிதரின் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இறுதியாக இரண்டு அணிகள் மோதியபோது, பெங்களூரு அணி ஒரு நெருக்கமான வெற்றியைப் பெற்று 2024 ஐ.பி.எல். பிளேஆஃ சுற்றுக்கு தகுதி பெற்றது.
அதேநேரம், இந்த தோல்வியுடன் சென்னை அணியானது பிளேஆஃ சுற்றுக்கான வாய்ப்பினை தவறவிட்டு தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு சென்னை, எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோர் கவனிக்க வேண்டிய இரண்டு முன்னணி வீரர்களாக இருப்பார்கள்.
0 Comments