
2025 தமிழ் சிங்கள புத்தாண்டு அதிகாலை 3.21க்கு அமையப்பெற்ற சுப நேரத்தில் உதயமானது. இம்முறை மலர்ந்துள்ள புத்தாண்டு விசுவாசுவ புத்தாண்டு என அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து மீண்டும் புதிய பயணத்தை ஆரம்பிக்கும் நாளாக இன்றைய புத்தாண்டு அமையப்பெற்றுள்ளது.
தமிழ் புத்தாண்டை பாரம்பரிய முறையில் கொண்டாடுவதற்கு எமது முன்னோர் அமைத்த வழிமுறைகளை இன்றைய தலைமுறையினரும் கடைபிடிக்கின்றனர். விசுவாசுவ வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை (14.04.2025) அன்று அதிகாலையில் சூரியன் அதிகாலை 3.21க்கு மேஷ ராசியில் நுழையும் போதே புத்தாண்டு உதயமாகிறது.
இதற்கமைய மலர்ந்துள்ள இந்த புத்தாண்டை வரவேற்கும் வகையில் தமிழர்கள் பாரம்பரிய முறையிலான வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். விஷ புண்ணியகாலம், கைவிசேடம், தொழில்களை ஆரம்பித்தல் என அனைத்தும் அமையப்பெற்றுள்ள சுப நேரத்தில் அவற்றை செய்வதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.
குடும்பத்தினருக்காக மாத்திரமன்றி உலக நன்மைக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டு உலக மக்கள் அனைவருக்கும் வறுமை இல்லாமல் இருக்கவே தாம்பூலத்தல் தானியங்களும் அரிசி, பருப்பு போன்றவையும் வைக்கின்றனர்.
மலர்ந்துள்ள இந்த இனிய புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும், சௌபாக்கியமும், அமைதியையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென ஸ்டார் வானொலி சார்பாக வாழ்த்துகின்றோம்.
0 Comments