Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் தாயும் பலி…!



அம்பேபுஸ்ஸ - திருகோணமலை வீதியில் பெலிகமுவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மற்றும் தாய் உயிரிழந்துள்ளதுடன் மகன் படுகாயமடைந்துள்ளதாக கல்வெல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளது.

கல்வெல பகுதியிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த நாய் மீது மோதியதில், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த சிறிய கால்வாயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் தாயும் மகனும் படுகாயமடைந்துள்ள நிலையில் கல்வெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தையும் தாயும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை - தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய தந்தையும் 21 வயதுடைய தாயுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த மகன் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்வெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments