
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து சுயாதீன வழக்கு விசாரணை அலுவலகம் அவசியம் என போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்காக சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யும் கூலிப்படைகள் இல்லாத வெள்ளை வான்கள் இல்லாத சட்டவிரோத தடுப்பு முகாம்கள் இல்லாத புதிய சமூகமொன்றை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு அன்று நிலவிய அரசியல் கலாச்சாரமே காரணம் என தெரிவித்துள்ளார்.
0 Comments