Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



வாக்காளர் அட்டைகள் குறித்து…!



உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (16) அந்தந்த தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

அதற்கமைய, ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து தபால் மாஅதிபர் ருவன் சத்குமார மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு வீட்டிற்கும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ஏப்ரல் 29 ஆம் திகதி வரை இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

இதற்கான விசேட நாளாக ஏப்ரல் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த முக்கிய ஆவணத்தை கையொப்பம் பெற்று வீட்டில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதால் விடுமுறை தினத்தை இதற்காக தெரிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே வீட்டில் உள்ள யாராவது ஒருவர் வீட்டில் தங்கியிருந்து கையொப்பமிட்டு அதைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.



ஏப்ரல் 29 ஆம் திகதிக்குப் பின் விநியோகிக்கப்படாத வாக்காளர் அட்டைகள் இருக்க வாய்ப்புள்ளது. அவற்றை அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி பெறக்கூடிய வசதியை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments