
இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்தும் பணிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். இதனூடாக தென்னிந்திய பிராந்தியத்தின் அபிவிருத்தி அடைந்த துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் வளர்ச்சி அடையும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க சந்தைகளை தவிர வேறு புதிய சந்தை வாய்ப்புக்களை இலங்கை கண்டறிய வேண்டும், ஆடை ஏற்றுமதியை மாத்திரம் நம்பியிருப்பதால் எவ்விதமான பலனும் ஏற்பட போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
புதிய ஜனநாயக முன்னணியின் விசேட சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்தும் பணிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். இதனூடாக தென்னிந்திய பிராந்தியத்தின் அபிவிருத்தி அடைந்த துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் வளர்ச்சி அடையும். ஹம்பாந்தோட்டையும் நாட்டிற்கு பலன் தரக்கூடிய வகையில் துரித வளரச்சியை அடையும். அதே போன்று இந்தோனேஷியா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளுடனான பொருளாதார ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதுள்ளது.
அதனை தொடர்ந்து வியட்நாமுடனான பொருளாதார ஒப்பந்தமும் நிலுவையில் உள்ளது. மறுபுறம் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முன்னெடுக்க வேண்டியதுள்ளது.
மேலும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் வரி விதிப்பு இலங்கைக்கு பாதகமான நிலைமையை தோற்றுவித்துள்ள நிலையில், ஆடைத்தொழில் துறையிலிருந்து மாற்று ஏற்றுமதி பொருட்கள் தொடர்பில் சிந்தித்து தீர்மானிக்கப்பட வேண்டும்.
அமெரிக்க சந்தைகளை தவிர வேறு புதிய சந்தை வாய்ப்புக்களை இலங்கை கண்டறிய வேண்டும். ஆடை ஏற்றுமதியை மாத்திரம் நம்பியிருப்பதால் எவ்விதமான பலனும் ஏற்பட போவதில்லை. இவ்வாறான சவால்களை முன்கூட்டியே அறிந்து தான் பொருளாதார மறுசீரமைப்பு சட்டங்கள் எமது ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. ஆனால், அவை இன்று தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதானி நிறுவனத்துடனான பிரச்சினையின் பின்னர் சர்வதேச முதலீடுகள் வருவதில்லை.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அரசாங்கம் திருகோணமலைக்கு அழைத்து சென்றிருக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளை சந்திப்பதை அரசாங்கம் தடுத்தது. தமிழ் அரசியல் தலைவர்களை சந்திக்கும் போது அதிகாரிகள் இருந்துள்ளனர்.
இறுதியில் ஜே.வி.பி யிலிருந்து பிரிந்து சென்றவர்கள் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அநுராதப்புரத்தில் இருந்து இராமேஷ்வரம் ஊடாக பிரதமர் மோடி இந்தியா சென்றார். ஞாயிற்றுக்கிழமை மலை வரை இருந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் 12 மணியுடன் நிறைவடைந்தது என்றார்.
0 Comments